இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 

tamillk

தற்போது நாட்டின்  ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

வளிமண்டலத்தில் தற்போது தூசிகள் துகள்கள் அதிகம் காணப்படும் காரணத்தால் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்றதாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசி துகள்கள் வருவது இதற்கான முக்கிய பிரச்சனையாக காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை காற்றின் தரச்சுட்டென்

இன்றைய தினம் இலங்கையில் பல நகரங்களில், காற்றின்  தரச்சுட்டென் 150-200 வரை காணப்படுவதால் இவை அனைத்தும் ஆரோக்கியமற்ற நிலை என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும்  நாட்டின் நகரங்களில் காற்றின் தரச்சுட்டென் மன்னாரில் 117 காற்றின் தரச்சுட்டென் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் யாழ்ப்பாணத்தில் 212, கம்பஹாவில்189, தம்புள்ளையில்179, கொழும்பில் 169, கண்டியில் 161, நீர்கொழும்பில்170, அம்பலாந்தோட்டையில்157 காற்றின் தரச்சுட்டென் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அனைவரும் முகக்கவசம் அணியுமாறு வைத்தியர் ஆலோசனை

தற்போது நிலவும் காற்றின் மாசு நிலை காரணமாக சுகாதார பாதுகாப்பிற்காக அனைவரும் முகக்கவசம் அணியுமாறு வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வைத்தியர் தெரிவிக்கையில் முடிந்த வரையில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். தற்போது இந்தியாவில் இருந்து வரும் காற்றினால், கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம், கண்டி, வவுனியா ஆகிய நகரங்களில் இந்த மோசமான காற்று மாசு நிலை பதிவாகியுள்ளதாகவும்.

மேலும் இந்த நிலைமை இலங்கையில் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக காணப்படாததால் முதியவர்கள், குழந்தைகள், இருதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்த வரை தவித்துக் கொண்டால் மிக நல்லது மற்றும் அனைவரும் முகக் கவசத்தை அணியும் படி அவர் குறிப்பிட்டுள்ளார்.




புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்