இலங்கையில் வளிமண்டல சூழ்நிலையால் நாளைய தினம் பாடசாலை விடுமுறையா? வெளியான தகவல்

 

tamillk news

தற்போது இலங்கையில் வளிமண்டல சூழ்நிலையில் பாடசாலை நாளை வெள்ளிக்கிழமை (09-12-2022) நடத்துவது தொடர்பாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சருக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க பொது செயலாளர் சரா. புவனேஸ்வரன் அனுப்பிய கடிதத்தில் தற்போது நாடு முழுவதும் வளிமண்டலம் மிகவும் மோசமாக காணப்படுவதால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மிகவும் குளிருடன் மலையும் மற்றும் அச்சுறுத்தல் தூசுக்கள் வீசும் என்று ஆளுநர்களாலும் எச்சரிக்கப்பட்டதால் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து என்பவற்றில் கவனம் செலுத்தி பாடசாலையை நடத்துவது தொடர்பாக அவசர தீர்மானம் எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இன்றைய தினம் வியாழக்கிழமை போன்று நாளை (09-12-2023) வெள்ளிக்கிழமையும் சூழ்நிலை காணப்பட்டால் மாணவர்களை பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்புவதற்கு அச்சம் கொள்வார்கள் ஆகையால் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பாடசாலையில் மூடுவதே பொருத்தமாக இருக்கும் என பலரும் கருதுவதால் பொருத்தமான முடிவு ஒன்றை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்