நீர்கொழும்பில் 10 வயது சிறுவனை கடத்திய பெண்!

tamillk news


 போதைப்பொருளை கொள்ளளவு செய்த பணத்தை செலுத்தாமையால் பத்து வயது சிறுவனை கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பில் உள்ள வர்த்தகரின் மகன் ஒருவர் போதைப்பொருள் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள பெண் ஒருவரிடம் இருந்து போதை பொருளை கொள்ளளவு செய்துள்ளார் இதற்கான பணத்தை செலுத்த தாமதமானது காரணமாக வர்த்தகரின் 10 வயதான பேரனை கடத்திச் சென்று கிராண்ட்பாஸ் ரந்திய உயன பகுதியில் இருக்கும் வீட்டு தொகுதியில் தடுத்து வைத்துள்ளார்.

சிறுவனை கடத்திச் சென்ற பெண் வர்த்தகரை தொடர்பு கொண்டு அவரின் மகன் பெற்றுக்கொண்ட போதைப்பொருளுக்கான பணத்தை செலுத்துமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் புலனாய்வு தகவலுக்கு அமைய, காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவனை குறித்த இடத்திலிருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


இதனையடுத்து சிறுவனை கடத்தியதாக கூறப்படும் போதைப்பொருள்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணை கிராண்ட்பாஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்