நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை; எச்சரிக்கை!



நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழையும் பலத்த காற்றும் வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் இதன் காரணமாக மின்னல் தாக்கங்களிலிருந்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் திருகோணமலை முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்த்தப்படுகிறது.

இதேபோன்று சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரங்களின் அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுகிறது.


இதேபோன்று நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மீதான இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதியில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதால் கடற்பரப்புகளிலும் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும்.

இந்த நிலையில் மின்னல் தாக்கங்களினால் ஏற்பட்ட கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கையாக செயல்படுமாறு  பொது மக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்