சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்டலினா ஜியோஜிவா செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றில் அவர் தெரிவித்த விடயம் கடந்த ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு முழு உலகமே மிகக் கடினமான பொருளாதாரத்தை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா மெதுவான வளர்ச்சியே இதற்கு காரணம் என்றும் மற்றும் யூக்ரின் போரும் அதிகமான வட்டி வீதங்கள் காரணமாகவும் தற்போது உலகின் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதங்களாக காணப்படுவதாகவும் கூறினார்.
உலகிலே இரண்டாவதாக பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாடான சீனா தனது கொரோனா சுகாதார கொள்கைகளை தளர்த்தியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துள்ளது என கிறிஸ்டலினா ஜியோஜிவா தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் யுக்ரைன் போரினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார பாதிக்கப்பட்டுள்ள நிலைமையில் எதிர்வரும் காலங்களில் பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் கூறினார்.



