ஜனாதிபதி யாழ் வருகையால் ஆர்ப்பாட்டங்களும் தாய்மாரின் கண்ணீரும்

ஜனாதிபதி தைப்பொங்கலை கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு இருந்த போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தாய்மார்கள் பொலிஸாரின் கைகளை பிடித்து கதறி அழுத காட்சிகள் அங்குள்ள அனைவரையும் கண்கலங்க வைக்கும் அளவுக்கு நிகழ்ந்துள்ளது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மததலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள்  ஆகியோரால் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளும் போது இவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போன உறவினர்களின் தாய்மார்கள் தங்களுடைய கோரிக்கையை கண்ணீருடன் முன் வைத்தனர்.

 


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்