வவுனியாவில் போதை மாத்திரைகளை போலீசாரின் ஒத்த தலைப்பில் மீட்கப்பட்டுள்ளதாக மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி அரங்கன் போதை பொருள் பாவனை பற்றி இன்று கருத்து தெரிவிக்கையில் இவ்விடயத்தை தெரிவித்தார்.
மேலும் இவர் தெரிவிக்கையில் வவுனியா மாவட்டத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் மற்றும் மதுபான பாவனையும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாகவும் சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இடத்திலும் அதிகரித்துச் செல்கின்றது.
வவுனியா மாவட்டத்தின் நெளுக்குளம், கூமாக்குளம், செக்கட்டிப்லவு உள்ளிட்ட பல கிராம பகுதிகளிலும் போதை போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
பிள்ளைகள் மீது பெற்றோர்களின் கவனம்
இவ்வாறான போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரால் மாத்திரம் முடியாது பெற்றோர்களாகிய நீங்களும் இதில் மிக கவனம எடுக்க வேண்டும் பிள்ளைகளுக்கு அதிகமான பணத்தை கொடுப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் பாடசாலைக்கு பிள்ளைகளுக்கான உணவுகளை கொடுத்து அனுப்புங்கள்.
மேலும் பெற்றோர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகள் பாடசாலைகள் என அனைவரும் போதைப்பொருள் பாவனைக்கு தொடர்பில் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.



