சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மேற்கு இந்தோனேசியா கடலுக்கு அடியில்!


சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இந்தோனேசியாவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை கடலுக்கு அடியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமாக ஏற்பட்டுள்ளது.

 அச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கு 48 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் மையத்திலிருந்து ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த பகுதியில் 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பறந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசுபிக் கடற்படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளையமான நெருப்பு வளையத்தின் மீது இருப்பது காரணமாக அடிக்கடி இங்கு  பூகம்பங்கள் ஏற்படுவதோடு மற்றும் எரிமலை வெடிப்புகளானால் பாதிக்கப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்