ஜனாதிபதியுடன் தமிழ் கட்சிகள் சந்திப்பில் முன்னேற்றமின்றி நிறைவடைந்தது



தமிழ் தேசிய கட்சிகளும் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை இன்று(10) ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் தமிழ் தேசியக் கட்சிகள் முன்வைத்த கோரிக்கையான படையினர் வசம் உள்ள காணிகள் விடுப்பு, அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் போனோர் போன்ற விடயங்களில் இருந்து ஜனாதிபதி தரப்பிலிருந்து இன்று பதில் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் இந்த பேச்சு வார்த்தை போது ஒரு வார அவகாசத்தை ஜனாதிபதி தரப்பு கோரிமைக்கு அமைய பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சு வார்த்தையானது இன்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் பிப்ரவரி நான்காம் திகதி நடைபெறவுள்ள 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர்  பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்தப் பிரச்சனைக்கான தீர்வினை உடனடியாக காணவில்லை என்றால் 2040 ஆம் ஆண்டு வரை இந்த பிரச்சனை நீடித்துக் கொண்டே செல்லும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நல்லிணக்க செயல்பாடுகள் முக்கியமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்