யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன், இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து கடந்த முதலாம் திகதியிலிருந்து மாவட்ட அரச அதிபர் நியமிக்கப்படாத நிலைமையில் காணப்படுகிறது.
புதிய அதிபராக நியமிப்பதற்கு வட மாகாண ஆளுநர் மதத்தலைவர்களிடம் பரிந்துரை செய்து தருமாறு கேட்டபோது மத தலைவர்கள் இதனை மறுத்து விட்டார்கள்.
மேலும் வடக்கு மாகாண ஆளுநரால் மேலதிக மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய ஒருவரின் பெயரை பரிந்துரை செய்த போதும், இதனை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் எதிர்பார்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதியின் செயலகத்தில் பணியாற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரே புதிதாக அரச அதிபராக நியமிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் உள்ளடங்காத போதும் இறுதி நேரத்தில் உள்ளடங்கப்படலாம் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.



