தோல்வியில் முடிந்தது இங்கிலாந்தின் முதல் வெண்கல ஏவல்!



இங்கிலாந்தின் நாட்டின் முதல் முறையாக விண்வெளிக்கு செலுத்தப்பட்ட விண்கலம் தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

விண்வெளிக்கு ஏவப்படுவதற்கான அனைத்து வேலை திட்டங்களும் நிறைவடைந்து விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயரம் விண்கலத்தை பொருத்தி விண்ணுக்கு ஏவுவதற்கு முடிவு செய்தது.

இந்த விமானத்தில் ஒன்பது செயற்கை கோள்கள் பொருத்தப்பட்ட விண்கலம் இருந்தது.

விண்ணுக்கு ஏவப்படுவதற்காக இங்கிலாந்தின் கோர்ன்வோலில் உள்ள விண்வெளி தளத்தில் விண்கலம் வைக்கப்பட்டு விமானம் புறப்பட்டது.

விண்வெளிக்கு ஏவப்பட்ட விமானம் ஆனது வெற்றிகரமாக அயர்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் பெருங்கடலில் 35 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானத்தின் விண்கலங்கள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் இந்த நிலையில் விண்கலனில் பொருத்தப்பட்டிருந்த ஒன்பது செயற்கை கோள்களையும் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தவில்லை இதனால் இங்கிலாந்தின் விண்கலம் ஏவுதல் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்தத் திட்டம் மாத்திரம் சரியாக செயல்பட்டு இருந்தால் பூமியின் சுற்றுவட்ட பாதையில் விண்கலத்தை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து இணைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்