வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் கலை இயக்குனரான சுனில் பாபு காலமானார்.
இவர் கேரளாவை சேர்ந்தவர் இவர் ஏராளமான திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார் அந்த வகையில் துப்பாக்கி, எம் எஸ் தோனி, சீதா ராம் இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுனில் பாபு மாரடைப்பு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேலை சிகிச்சைகள் பயனின்றி இறந்துள்ளதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இடம் பெற்ற வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சுனில் பாபுவை மிகவும் திறமை வாய்ந்தவர் என புகழ்ந்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரின் மறைவு திரை உலகில் இருக்கும் அனைவருக்கும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.



