இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்த சுமார் 6 லட்சம் பெறுமதி கொண்ட போதை மாத்திரைகளை நேற்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு முற்பட்ட வேலை ராமநாதபுரத்தில் உள்ள வேதாளை கிராமத்தில் உள்ள கடற்கரையில் வைத்து கியூ பிரிவு காவல்துறையினர் கைப்பற்றியதாக இந்தியா ஊடகங்கள் செய்தியில் வெளியிட்டுள்ளன.
போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் ஏற்றிக் கொண்டிருந்தபோதே இந்தியாவின் கியூ பிரிவு காவல்துறையினர் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த நடவடிக்கையின் போது தப்பியோடிய கடத்தல்காரர்களை காவல்துறையினர் தேடி வருவதோடு கடலோரப் பகுதியிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:
இலங்கை செய்திகள்



