ஓமான் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த விட்டுப் பணியாளர்கள் யூ.எல்.206 விமானத்தின் மூலம் இன்று காலை அவர்கள் நாட்டை வந்தடைந்தார்கள்.
ஓமான் -மஸ்கட்டில் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 118 வீட்டுப் பணியாளர்களில் 11பேர் இலங்கை நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதில் இப்போதைக்கு ஏழு பேர் மாத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஏனைய நான்கு பேரின் ஆவணங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாடு திரும்பமுடியாமல்பேன நிலையில் ஏழு பேரை மாத்திரம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வீட்டுப்பணியாளர்கள் வென்னப்புவ, திருகோணமலை, கிண்ணியா, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பணிப்பெண்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்



