உழவர்களுக்கு நன்மை செய்துக்கொண்டிருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக இன்று உலகில் அனைத்து தமிழர்களும் தைத்திருநாளை மிக சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் தைத்திருநாளை கொண்டாடும் போது தமிழர்களுக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற ஆரம்ப நாளாக இந்த தைத்திருநாளை கொண்டாடுகிறார்கள்.
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மலையகம், தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும் இந்த திருநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த வருடம் தமிழர்களின் உரிமைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரங்கள் அனைத்தும் சீராகி தைத்திருநாளில் புதிதாக மலர்ந்திட வேண்டும் என்று எமது தமிழ் எல் கே செய்தி தளம் பிரார்த்தனை செய்கின்றது.
Tags:
இலங்கை செய்திகள்



