எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக களம் இறங்குவதற்கு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி இன்று (13.01.2023) கட்டுப் பணத்தினை செலுத்தியது.
குறித்த கட்டுப் பணத்தை செலுத்துவதற்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்திற்கு கட்சியின் வன்னி மாவட்டங்களுக்கான செயலாளர் நி. பிரதீபனின் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வவுனியா நகர சபை மற்றும் தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களிலும் இம்முறை தமிழ் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
Tags:
Vavuniya news




