குறைந்த வருமானத்தை பெறும் இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு மாத காலத்திற்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த நலன் திட்டத்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வாறு அரிசிகளை வழங்குவதற்கு 40,000 மெற்றிக் தொன் தேவைப்படுவதாகவும், இதற்காக அரசாங்கத்தினால் 61.600 மெற்றிக் தொன் அரசியல் கொள்ளளவு செய்ய வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வேலை திட்டங்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களிடமிருந்தும் உதவிகளைப் பெற்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



