எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் QR கோட்டா முறையை பயன்படுத்தாது புறக்கணித்து எரிபொருள் விநியோகம் செய்த பெட்ரோல் நிலையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் செய்யும்போது தேசிய எரிபொருள் அனுமதி QR முறைமையே பின்பற்றுவது இல்லை என தெரிய வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக நேற்று பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் ஆகிய அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற கூட்டத்தில் QR விநியோக பொறிமுறையை மறு ஆய்வு செய்வதற்கான நடைபெற்ற கூட்டத்தில் கோட்டா முறையை பின்பற்றாத பல பெட்ரோல் நிலையங்களை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்



