கொழும்பு 7 குதிரை பந்தைய திடலில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகத்தப்படும் இளம் யுவதி ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த யுவதி 23 வயது உடையவர் எனவும் அவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கறுவாதீதோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Tags:
இலங்கை செய்திகள்



