அரச அலுவலகங்களில் கடமையின் போது கையடக்க தொலைபேசி பயன்படுத்துவது கட்டுப்பாடு!


tamillk news

அரசு அலுவலகங்களில் அரச கடமைகளின் நேரங்களில் போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு கடுமையாக நடவடிக்கை எடுப்பதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன புத்தாண்டுக்கான பணிகளை தொடங்கும் நிகழ்வில் இதனை அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றியதில் சில அரச அலுவலர்கள் அரச கடமையின் போது பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகிய தளங்களில் உலாவிய வண்ணம் அரசு அலுவலகத்திற்கு சேவைகளை பெற வரும் மக்களிடம் செயல்படுவதாகவும் இதனை தான் அவதானித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தனியார் அலுவலக ஊழியர்கள் தங்களுடைய கையடக்க தொலைபேசியை அலுவலகத்திற்கு வரும் நுழைவாயிலிலே கையடக்க தொலைபேசியை நிறுத்திவிட்டு பிராத்திகரமாக வைக்கப்பட்டு இருக்கும் கையடக்க தொலைபேசி வைக்கும் இடத்தில் தொலைபேசியை வைத்து விட்டு அலுவலகத்திற்கு செல்கிறார்கள் பின்னர் பணி முடிந்த பின்பு தான் கையடக்க தொலைபேசி எடுத்துக்கொண்டு செல்கிறார்கள் என்றும் கூறினார்.

எதிர்காலத்தில் இவ்வாறான செயல்பாடுகள் அரசு அலுவலகத்திற்கும் தேவைப்படும் போது இவ்வாறான முடிவுகளை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அரச பணியில் இருக்கும் போது அத்தியாவசிய தேவைகள் ஏற்படும் போது  கையடக்க தொலைபேசியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் அரசாங்கத்தினால் பெரும் சம்பளத்துக்கு ஏற்ற நியாயமான சேவையை வழங்குமாறு அரசு சேவையாளர்களிடம் இக்கோரிக்கையை எடுத்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்