உயிரோடு இரு இருக்கும் போது காதல் ஜோடிகளை பிரித்து அவர்களின் திருமணத்திற்கு தடையாக இருந்த பெற்றோர்கள் அவர்கள் இறந்த பின்பு அவர்களின் சிலைக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று இந்தியாவில் குஜராத்தில் நடைபெற்றுள்ளது.
ஆவியின் தொந்தரவு
நிறைவேறாத ஆசை நிறைந்த காதல் ஜோடிகளின் ஆத்மாக்கள் அடிக்கடி தொந்தரவு
செய்வதாக பயத்தில் இவர்கள் இந்த சடங்குகளை செய்துள்ளார்கள்.
இந்த திருமண நிகழ்வில் உண்மையான திருமண நிகழ்வு போல் இரு வீட்டாரின் உறவினர்களை அழைத்து மிகவும் பிரமாண்டமாக இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள்.
இளம் காதல் ஜோடிகளின் தற்கொலை
குஜராத் மாநிலம் டாப்சி மாவட்டத்தை சேர்ந்த கணேஷ் ( 25) ராஞ்சனா(22) இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் இந்த நிலையில் தனக்கு நல்ல வேலை கிடைத்த பின்பு தமது காதலை குறித்த வீட்டில் சொல்லலாம் என ரஞ்சனாவிடம் கணேஷ் கூறி வந்த நிலையில் கணேசுக்கு இன்ஜினியர் ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
இதன் பின்பு தங்களின் காதலை குறித்து வீட்டில் கூறியுள்ளனர் காதல் விவாகரத்தை இரு வீட்டாரரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் இவர்கள் ஒரு வகையில் தூரத்து உறவினராகவும் காணப்பட்டிருந்தனர் முன்னொரு காலத்தில் ஏற்பட்ட பகை காரணமாக இவர்களின் காதலுக்கு உறவினர்கள் தடை போட்டனர்கள் இதை அடுத்து தங்களின் எதிர்ப்பையும் மீறி நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உங்களை கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளார்.
நிறைவேறாத ஆசையில் இளம் ஜோடி தற்கொலை
தங்களின் காதலுக்கு இரு வீட்டார்களும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் தங்களின் திருமணம் நடைபெறாது என்ற முடிவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊருக்கு வெளியே உள்ள ஒரு மரத்தில் ஒன்றாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்.
ஆவிகளின் தொண்டரவு ஆரம்பம்
இவர்களின் இறப்பு இரு விட்டார்களையும் கடுமையான சோகத்தில் ஏற்படுத்திய நிலையில் வீட்டில் அடிக்கடி மரணங்களும் தொழிலில் பாரிய பாதிப்பும் மற்றும் உறவினர்களின் கனவில் வந்து அடிக்கடி தொண்டரவுகளை ஏற்படுத்தியதாகவும் கூறி ஜோதிடர்களிடம் சென்று பார்த்தபோது இவர்களின் நிறைவேறாத ஆசையால் தான் இவர்கள் இப்படி செய்கிறார்கள் இவர்களின் சிலைக்கு நீங்கள் திருமணம் செய்து வையுங்கள் எல்லாம் சீராகிவிடும் என்று கூறியதும் இந்த திருமண ஏற்பாடை மிக பிரம்மாண்டமாக கணேஷ் ரஞ்சனா ஜோடிகளின் கல் சிலைக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.



