யாழ்ப்பாணத்தில் குளத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

அரியாலை பொலிஸ் பிரிவிற்குப்பட்ட நயன்மார்கடு குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



குறித்த பெண்ணின் சடலமானது குளத்தில் இருந்து கரை ஒதுங்கிய நிலையில் ஊர் மக்களால் பொலிஸார்ராக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

இவ்வாறு குளத்தில் சடலமாக மீட்டெடுத்தப்பட்ட பெண் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகேஸ்வரி (வயது 26) இளம் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் சடலத்தை பரிசோதனை செய்வதற்காக யாழ்ப்பாண போதனை வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகிறார்கள்


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்