விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் மேயர் மணிவண்ணன் தலைமையிலான அணியும் இணைந்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இன்று விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஊடகங்களுக்கு இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் மாநகர மேயர் மணிவண்ணன் கலந்துகொண்டு வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரண்டு அணியும் ஒன்று சேர்ந்து போட்டியிட இருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
Tags:
jaffna



