உயர்தரப் பரிட்சை தொடர்பாக தனியார் வகுப்புகளுக்கு தடை



உயர்தரப் பரிட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று (17.01.2023) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதும் மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும் உயர்தர பரீட்சை பெப்ரவரி 17ஆம் திகதி வரை 2,200 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது இந்த பரீட்சைக்கு 3 லட்சத்து 30 ஆயிரத்து 709 பேர் தகுதிப்பெற்றுள்ளனர் இதில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 109 பேர் பாடசாலை மூலம் விண்ணப்பித்தவர்கள் ஆவார்.

மேலும் பறிக்க அனுமதி அட்டை குறைபாடுகள் இருப்பின் அவற்றை சீர் செய்வதற்கு நாளை 18-01-2023 வரை இணையதளம் வழியாக திருத்திக் கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம்  அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்