யாழ்ப்பாணம் அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்

வடக்கு மாகாண சபை விவசாய அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் இவர் நிர்வாக சேவையில் மட்டக்கிளப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி வந்துள்ளார்.

மேலும் இவர் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் வட மாகாண சபையின் பேரவை செயலாளராகவும் பிரதிப் பிரதம செயலாளராகவும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளராகவும் கடமையாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மாகாண சபை விவசாய அமைச்சின் செயலாளராகவும் இறுதியாக  கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்