தமிழ் தேசியக் கூட்டணி கட்டுப்பணம் செலுத்தியது



உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டணியினர் இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைக்குமான கட்டுப்பனத்தை யாழ் மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் செலுத்தினர்.

இதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் மக்கள் கூட்டணியினரும் கட்டு பணத்தை செலுத்தியுள்ளார்.

மணிவண்ணன் தலைமையிலான குழுவினரும் இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள 17வது சபைக்குமான கட்டுப்பணத்தை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளனர்.

இதேபோன்று யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைக்கு போட்டியிடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இன்றைய தினம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

இதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான அணியினர் யாழ் மாவட்டத்தில் அமைந்திருக்கும் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்படத்தை செலுத்தியுள்ளார்.

மேலும் தேர்தலுக்காக போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பனத்தினை இன்றைய தினம் செலுத்தியுள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்