கடந்த மாதம் அளவில் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் சென்னை விமான சேவையானது சிறந்த பலனை தந்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளனர்.
அதிகமான முதலீட்டு நடவடிக்கைகள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விமான சேவையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஆசன பதிவுகள் செய்தப்பட்டு வருவதாகவும். ஒரு வாரத்துக்கு நான்கு சேவைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அதிக அளவிலான இந்தியாவிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் இதன் மூலம் நாட்டுக்கு அதிகமான லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Tags:
jaffna



