கல்கிசை பகுதியில் ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்ற போர்வையில் இயக்கி வந்த விபச்சார விடுதியை பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
இதன்போது நிலையத்தின் முகாமையாளர்கள் உட்பட பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்று (18-01-2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 41, 34, 41 வயதைக் கொண்டவர்கள் எனவும் இவர்கள் இரத்மலானை, அனுராதபுரம், பொலவத்த ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர்களை கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலதிய விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Tags:
இலங்கை செய்திகள்



