இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சற்றுமுன் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
மேலும் எஸ். ஜெய்சங்கர் உடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் நான்கு பேரும் வருகைதந்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணாவர்த்தன வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் தமிழ் தரப்பினரையும் சந்தித்து கலந்து உரையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவையும் சந்தித்து கலந்து உரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விஜயத்தின் மூலம் இந்தியாவின் இரண்டு முக்கிய கடன்சார் அண்டைய நாடுகளுக்கான இலங்கை மற்றும் மாலைதீவுடன் இருதரப்பு ஒத்துழைப்புக்கள் மற்றும் ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்தும் வகையிலே இந்த விஜயம் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



