இலங்கையை சேர்ந்த 38 பேரை கனடாவுக்கு அனுப்புவதாக முகவர்களால் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலே இந்த 38 பேரையும் காட்டிக்கொடுக்கப்பட்டு 2021-06-10 ஆம் திகதி கர்நாடகாவிலின் மங்களூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
இந்தநிலையில் நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்து உடனடியாக நாட்டுக்கு அனுப்புமாறு ஏற்பாடுகள் செய்வதற்கு உத்தரவிட்டிருந்த போதும் இதுவரைக்கும் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்த 38 பேரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள்.
மேலும் இவர்கள் தெரிவிக்கையில் விடுதலை ஆகிய 38 பேரும் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் இங்கு சிலர் கடும் நோய் தாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளனர் என அவர்கள் தெரிவித்தார்கள்.
Tags:
இலங்கை செய்திகள்



