யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று சென்ற பேருந்தின் மீது வவுனியாவில் கல் வீச்சு!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருக்கும் போது கல் வீசி தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மேலும் உங்கள் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஆனது 1.30 மணி அளவில்  வவுனியாவில் இருக்கும் சாந்தி சோலை சாந்தி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பேருந்தின் மீது கல்வீசி சென்று உள்ளார்கள்.

இந்த சம்பவத்தின் போது பேருந்தில் முன் பகுதி கண்ணாடி மாத்திரம் சேதம் அடைந்த நிலையில் பேருந்தின் சாரதிக்கு கண்ணாடி துகளினால் காயங்கள் ஏற்பட்டு வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த விதமான சேதங்களும் ஏற்படாத பட்சத்தில் பயணிகள் அனைவரையும் வேறு பேருந்தில் பயண ஏற்பாடுகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்