மேலதிக நேரம் கொடுப்பானவை வழங்குமாறு தெல்லிப்பழை வைத்தியசாலையில் போராட்டம்!



தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்  ஆய்வுக்கூட தொழில்நுட்ப உத்தியோதர்களின் மேலதிக நேரம் கொடுப்பனவை வழங்காமல் இருப்பதால் ஆதார வைத்திய சாலையில் நோயாளர்கள் பல அசௌகரியத்தை எதிர்நோக்கி வருவதாக ஆதார வைத்தியசாலையின் நலன்புரி சங்க செயலாளர் சி.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள் தங்களுக்குரிய மேலதிக நேரம் கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் இருப்பதால் தங்களின் கடமை நேரம் தவிர்ந்த  நேரங்களில் கடமையாக்க மறுத்து வருகிறார்கள்.

இதேபோன்று அவர்களின் வேலை நாட்கள் தவிர்ந்த சனி, ஞாயிறு ,விடுமுறை தினங்கள் மற்றும் வேலை நாட்களுக்கு பின்னர் 4 மணிக்கு பின்னர் கடமையாக்காமல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களுக்கான மேலதிக நேரம் கொடுப்பனவர்களை வடமகன அதிகாரிகள் வழங்க மறுப்பதால் இவ்வாறான மேலதிக கடமைகளை மேற்கொள்ளாமல் உத்தியோதர்கள் செயல்படுவதாக தெரிய வருகிறது.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்