தேசிய பொங்கல் விழா நிகழ்வுக்காக இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கு ஜனாதிபதி கலந்து கொள்வதற்காக சற்றுமுன் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி இந்த நிகழ்வில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவை சந்திக்க உள்ளதாகவும் பின்னர் மதியம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, துர்க்கை தேவி மண்டபத்தில் மூன்று மணி அளவில் நடைபெறவுள்ள நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
Tags:
jaffna



