புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(14) தனியார் விடுதியில் கையொப்பமிடப்பட்டது.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசியக் கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவை இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை தயாரித்தார்.
இந்த கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்னும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
இதன்படி கூட்டணி ஒப்பந்தத்தில் புளொட் சார்பாக த. சித்தார்த்தனும் ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என். ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளி கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திட்டனர்.
புரிந்து உணர்வு ஒப்பந்தத்தின் போது விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் சின்னம் தொடர்பில் ஏற்பட்ட இழுபறி காரணமாக கூட்டத்தில் இருந்து இடை நடுவில் வெளியேறினார்.
தமிழ் மக்கள் கூட்டணியே இணைக்க சமரச முயற்சிகள் மேற்கொண்ட போதும் அவை பலன் அளிக்காத நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தீர்மானிக்கப்பட்டது.



