யானையின் மீது மோதி தடம் புரண்ட மட்டக்களப்பு தொடரூந்து




மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புலத்திசி கடுகதி தொடரூந்தில் காட்டு யானை மோதி உயிரிழந்த சம்பவம்

மேலும் இந்த சம்பவம் ஹபரன-கல்ஓயா பகுதியில் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

இப்பகுதியில் அதிகமான அளவில் காட்டு யானைகள் கூட்டமாக தொடரூந்து பாதையை கடந்து செல்வதால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இந்த யானைகள் கவுடுல்ல மற்றும் மின்னேரியா வனப்பகுதியில் உள்ள யானைகள் ஆகும்.

இந்த விபத்தின் போது தொடரூந்தின் முன் எஞ்சின் பகுதி பாதையை விட்டு தடம் புரண்டுவுள்ளது விபத்தில் யானையும் இந்த எஞ்சின் பகுதிக்குள் சிக்கிக் கொண்டது.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய உயிரிழந்த யானையின் வயதானது 20 இருக்கும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்