போதையை ஒழிப்போம் -விழிப்புணர்வு ஊர்வலம்!



போதைப் பொருட்களை ஒழித்து நாட்டின் தலைமுறைகளை காப்போம் எண்ணும் தொனிப்பொருளில் வவுனியாவில் (13.01.2023) விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இதன் ஏற்பாட்டை பள்ளிவாசல், உலமாக்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் சமூக வட்ட அமைப்பு ஒன்றிணைந்து ஊர்வலமாக முகைதீன் ஜும்மா பள்ளி முன்னிலையில் ஆரம்பமாகி மன்னார் வீதி வழியாக சென்று குருமங்காடு சந்தையில் நிறைவடைந்து விழிப்புணர்வுக்கான கூட்டங்களும் இடம்பெற்றது.

மேலும் இந்த கூட்டத்தில் போதை பாவனையால் ஏற்படும் பாதிப்புகளும் அதன் விழிப்புணர்வுகளை பற்றியும் கருத்தெருங்குகள் இடம்பெற்றது.

இந்த ஊர்வலத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பொலிஸார், உலமாக்கள், சுகாதாரப் துறையினர், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்