ஏஞ்சலோ மேத்யூஸ் எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒருநாள் போட்டிகளில் இணையவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், கடைசியாக 2021 மார்ச் மாதம் ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
அதன்படி, இரண்டு வருடங்களுக்குப் பிறகு இலங்கை ஒருநாள் அணிக்கு திரும்பவுள்ள இந்த அனுபவம் வாய்ந்த வீரர், இலங்கை அணிக்காக 5853 ஒருநாள் ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இதில் மூன்று சதங்களும் 40 அரைசதங்களும் அடங்கும்.
நியூசிலாந்தின் சுற்றுப்பயணத்தின் போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பு சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மேத்யூஸ் பங்கேற்றார்.
இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்த மேத்யூஸ், பின்னர் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ரடெல்லா பயிற்சி அணியில் சேர்ந்தார்.



