வவுனியாவில் சில பாடசாலையில் இன்று பதட்ட நிலை காணப்பட்டது

vavuniya news


வவுனியாவில் இருக்கும் சில பாடசாலைகளுக்கு பொலிஸார் நேரில் சென்று குண்டுதாரிகள் வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளமையுடன்.

இதனை அடுத்து பாடசாலைகளில் உள்ள மாணவர்களை வெளியில் ஒன்று கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதே போன்று சந்தேகத்துக்குள்ளானவர்களை பாடசாலைக்குள்  உள்வாங்க வேண்டாம் என்றும் பாடசாலைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் பதட்டமடைய தேவையில்லை பாடசாலை நிறைவடைந்ததுடன் உங்கள் பிள்ளைகளை உரிய நேரத்திற்கு சென்று அழைத்துச் செல்லுங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இருப்பினும் இந்த சம்பவத்தை அறிந்த பெற்றோர்கள் இன்று மதியம் தொடக்கம் பாடசாலைக்கு முன்பாக ஒன்று கூடியுள்ளனர்.

இந்த தகவல் ஆனது பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் மாத்திரம் தான் இது உறுதிப்படுத்தவில்லை.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்