இன்று (மார்ச் 29) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் பஸ் கட்டணங்களை விரைவில் திருத்தியமைக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ. 30 மற்றும் இந்த புதிய பேருந்து கட்டணம் நாளை (மார்ச் 30) முதல் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்துடன் ஏனைய பஸ் கட்டணங்கள் குறைப்பு தொடர்பிலான விரிவான தகவல்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விரைவில் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்



