எரிபொருள் விலையை குறைத்ததன் எதிரொலியாக முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதன்படி இன்று (29) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் முச்சக்கரவண்டிக்கான கட்டணத்தை கிலோமீட்டருக்கு 20 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் திரு.சுடில் ஜயருக் தெரிவித்தார்.
இரண்டாவது கிலோமீட்டரை 80 ரூபாவில் இயக்குவதற்கு முச்சக்கர வண்டி சாரதிகள் உடனடியாக மாற்றங்களைச் செய்யுமாறு அறிவுறுத்தப்படுவதாக அவர் கூறினார்.
Tags:
இலங்கை செய்திகள்



