எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 27) நாரஹேன்பிட்டி சரணாலயத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எந்தவொரு தேர்தலுக்கும் தமது அணி தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்திகள்



