வவுனியாவில் கடுமையான வெப்பநிலை காணப்பட்ட நிலையிலும் மாலை வேலைகளில் சில நேரங்களில் காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருகின்றது.
அந்த வகையில் (20) மாலை கடுமையான காற்றுடன் கூடிய மழையின் காரணத்தால் வவுனியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் அலுமடு கிராமம் அலுவலக பிரிவில் மூன்று வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகியதோடு அந்த குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.
அதே போன்று வவுனியாவின் சேனைப்புலவு கிராம அலுவலக பிரிவில் கடையுடன் கூடிய வீட்டு செய்தமடைந்த நிலையில் குடும்பத்தில் இருந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களில் 12 பேர் இந்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான உதவி திட்டங்களை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
Tags:
Vavuniya news



