(Jaffna tamil news) யாழ்ப்பாணம் நெடுந்தீவு 12ஆம் வட்டாரம் j/06 கிராம சேவகர் பிரிவில், மாவிலி துறைமுகம் பகுதியில் உள்ள வீடொன்றில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஐந்து பேரின் சடலங்கள் இன்று (22) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் உள்ளதாகவும் அவர்கள் உறவினர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கும்பலில் வீட்டின் கணவன் மனைவியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் மற்றுமொரு பெண் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தக் கொலைகள் நேற்று (21) இரவு அல்லது இன்று (22) இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், கொலையுண்ட தம்பதிகளைத் தவிர, மீதமுள்ளவர்கள் கோயிலில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்ட உறவினர்கள் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கடற்படையினரும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.



