அனைத்து தமிழ் எல் கே இணையதள வாசகர்களுக்கு சோபகிருது புதுவருட வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் நான் (சித்திரை) தமிழ் புத்தாண்டு தினமான இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின் முக்கியமான ஒரு பண்டிகையான நாளாக சித்திரை புத்தாண்டு இந்த தினத்தில் சூரியன் முதல் ராசியான மேஷத்தில் பெயர்ச்சியாகும். இந்த நாளை மிகச் சிறப்பாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
60 ஆண்டுகளைக் கொண்ட தமிழ் வருடத்தில் தற்போது சுபகிருது ஆண்டு நேற்றுடன் முடிவடைகிறது. இன்று சித்திரை மாதம் முதலாம் திகதியில் இருந்து சோபகிருது ஆண்டு தொடங்குகின்றது.
உங்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு மிக நன்மை நிறைந்த ஆண்டாக அமைந்திட சோபகிருது புதுவருட வாழ்த்துக்கள்.
புதுவருடப் பிறப்பு
14.04.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.59 மணிக்கு சோபகிருது வருடம் பிறக்கிறது.
விஷு புண்ணிய காலம் மருத்து நீர் வைக்கும் நேரம்
14.04.2023 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.59 மணி முதல் மாலை 6.59 மணி வரை (தலை-கொன்றை இலை, கால்-புங்கை இலை,திசை-கிழக்கு அல்லது வடக்கு)
ஆடைகள்
வெள்ளை பட்டாடை, வெள்ளை கரை வைத்த புதிய பட்டாடை
ஆபரணங்கள்
முத்து, வைரம் பதித்தவை
கைவிசேட நேரம்
15ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.52 - 9.00
16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.49 - 9.48
வியாபாரம், புதுக்கணக்கு ஆரம்பித்தல்
11.05.2023 வியாழக்கிழமை முற்பகல் 10.24 மணி முதல் நண்பகல் 12.27 மணி வரை



