பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பெண் தொடர்ந்து மூன்று வாரங்களாக கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்டு கொண்டிருந்தபோது அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இவருக்கு கோவிட தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்_போதனை வைத்தியசாலை பிரதி பனிப்பாளர் சி.ஜமுனானந்த தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து அவர் நேற்று முன்தினம் (12.04.2023) போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு கோவிட் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர் தடுப்பூசிகள் அனைத்தும் செலுத்திக் கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
எனினும் மக்கள் அனைவரும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் பொது இடங்களில் முககவசம் அணிந்து கொள்வது அவசியம் எனவும் யாழ் _போதன வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.ஜமுனானந்த அறிவித்துள்ளார்.



