புதுவருட தினத்தின் போது நேற்று இரவு (14.04.2023) துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதுடன் இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நாட்டின் தென்பகுதி காலி-அஹஉங்கல்ல மித்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயம் அடைந்த 29 வயதானவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இரு சிறிய குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டை நடத்திய பின்னர் சிறு குழந்தைகளுடன் வந்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், இதன்போது அதில் பயணித்த இரண்டு சிறுவர்களும் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



