தனது இரண்டு பிள்ளைகளையும் சிறைக்கு அனுப்பிய தாய்

tamillk.com


புத்தாண்டு தினத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த இளைஞனை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் வெலிகம பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

இதன்படி இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 16,21,23, மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் எம்.எச்.சமுரங்க இளைஞன் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் நண்பர்களுடன் மது விருந்தின் போது வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகமானதால் குறித்த பெண் கொடுத்த தகவலின் பேரில் அவரது இரண்டு மகன்மார்கள் உட்பட சிலர் வீதியில் வைத்து இளைஞனை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்