சூரிய கிரகணத்தால் ஒரு நகரம் இருளில் மூழ்கியது!

 

tamillk.com

இன்று காணப்பட்ட அபூர்வ முழு சூரிய கிரகணத்தால் ஆஸ்திரேலியாவின் தொலைதூர நகரமான "எக்ஸ்மவுத்" காலை 60 வினாடிகள் முற்றிலும் இருளில் மூழ்கியுள்ளது."எக்ஸ்மவுத்" நகரில் கிரகணம் சிறப்பாகக் காணப்பட்டது. அரிதாகவே காணக்கூடிய இந்த கிரகணத்தை தங்கள் கண்களால் காண நேற்று காலை ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு அந்த நகரத்தில் குவிந்துள்ளனர்.


"நிங்லு சூரிய கிரகணம்" என்று பெயரிடப்பட்ட இந்த சூரிய கிரகணத்தின் கீழ், சந்திரனால் சூரியனின் முகத்தை முழுமையாக மூடுவதால், "எக்ஸ்மவுத்" நகரில் சுமார் 40 கிலோமீட்டர் அகலத்தில் இருண்ட நிழல் காணப்பட்டது. இந்த சூரிய கிரகணம் தென்கிழக்கு ஆசிய நாடுகள், கிழக்கு இந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளுக்கு பகுதி சூரிய கிரகணமாக தோன்றியுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்