மேலும் பல பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மிகுந்த கவனத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது சுங்கத்துறையின் வருவாய் இலக்குகளை அடைய உதவும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இந்த வருடத்தின் (2023) முதல் மூன்று மாதங்களில் சுங்க வருமானம் எதிர்பார்த்த வருமானத்தை விட 12 வீதம் குறைவாக காணப்படுவதாகவும், பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையே இதற்கு முக்கிய காரணம் எனவும் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய கூறுகிறார்.
மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று (18) மாலை இலங்கை சுங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற சுங்கத்தின் வருமான இலக்குகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



