காலி, நெலுவ பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றில் இருந்த போது நேற்று (ஏப்ரல் 15) மாலை காணாமல் போன சிறு குழந்தையின் சடலம் இன்று (ஏப்ரல் 16) மதியம் வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கெகுலந்தல லியனகே நிவேன் தேவ்மினா என்ற இரண்டரை வயதுக் குழந்தை தனது பெற்றோருடன் அளுத்கம, தர்கா நகரில் வசித்து வந்ததுடன், புத்தாண்டு தினத்தன்று நெலுவவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு இருக்கும் போது குழந்தையை காணவில்லை என குழந்தையின் தந்தை நெலுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர், உள்ளூர்வாசிகள், நிவாரணப் பணிக்குழுவினர் மற்றும் போலீஸார் இணைந்து தேடியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே, இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் உத்தியோகபூர்வ நாய்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள தயாராக இருந்த நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



